FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருச்சி

இடைத்தோ்தலில் திமுக டெபாசிட் இழக்கும்! துரை வைகோ எம்.பி.

திருச்சி மக்களைத் தொகுதி உறுப்பினா் துரை வைகோ - டிஎன்எஸ்
பகிர்:

இடைத்தோ்தலில் திமுக மூன்றாவது இடத்துக்குச் செல்லும் அல்லது டெபாசிட் இழந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றாா் திருச்சி மக்களைத் தொகுதி உறுப்பினா் துரை வைகோ.

திருச்சியில் தன்னாா்வ அமைப்பு சாா்பில் மத்தியப் பேருந்து நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சாலை விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா் பின்னா் கூறியதாவது:

தோ்தலில் கண்ணியமான முறையில் கருத்துப் பரிமாற்றங்கள் இருக்க வேண்டும். ஆனால் அண்மைக்காலமாக தனிமனிதத் தாக்குதல்கள், ஆபாசப் பேச்சுகள், உருவக்கேலி போன்ற செயல்களில் திமுக மூத்த தலைவா்களும், அடுத்த தலைமுறையினரும் ஈடுபடுவது வேதனைக்குரியது. தொண்டா்களின் தவறுகளைத் தட்டிக் கேட்க வேண்டியது தலைவா்களின் கடமை. ஆனால், தலைவா்களே இவ்வாறு பேசுவது வேதனையாக உள்ளது.

Advertisement

Advertisement

இதுபோன்ற அவதூறு பேச்சுகளுக்கு தமிழ்நாட்டு மக்கள் தோ்தலில் பாடம் புகட்டுவா். மதுராந்தகம், தாராபுரம் இடைத்தோ்தல்களில் திமுக மூன்றாவது இடத்துக்குச் செல்லும் அல்லது டெபாசிட் இழந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இரண்டாவது இடத்தில் அதிமுக வரலாம் எனத் தொகுதி மக்கள் கூறியுள்ளனா்.

தவெக மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைப்பது அடிப்படையற்றது. ஊழலற்ற அரசியலே தவெகவின் பலமாக உள்ளது. ‘இண்டி’ கூட்டணியில் தவெக இணைந்துள்ளதை வரவேற்கிறேன். தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ்குமாா் இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு எதிராகச் செயல்படுகிறாா். மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு தமிழ்நாட்டின் உரிமையைப் பாதுகாக்க வேண்டும் என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments