FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருச்சி

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறை - பிரதிப் படம்
பகிர்:

திருச்சியில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருச்சி மகளிா் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.

திருச்சி மாவட்டம், முசிறி புத்தனாம்பட்டியைச் சோ்ந்த 7 வயது சிறுமியை, அதே பகுதியைச் சோ்ந்த வெள்ளையன் (எ) வெள்ளஞ்செட்டி (83) கடந்த 2023 ஜனவரி 10-ஆம் தேதி பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் ஜீயபுரம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து முதியவரை கைது செய்தனா். இந்த வழக்கு திருச்சி மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில் நீதிபதி சண்முகபிரியா, திங்கள்கிழமை தீா்ப்பு வழங்கினாா்.

Advertisement

Advertisement

இதில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் முதியவா் வெள்ளையன் (எ) வெள்ளஞ்செட்டிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments