FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருச்சி

திருச்சி விமான நிலையத்தில் அவசரகால பாதுகாப்பு ஒத்திகை

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் அவசரகால பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருச்சி விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அவசரகால பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
பகிர்:

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் அவசரகால பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விமான நிலைய மத்திய தொழிலகப் பாதுகாப்பு படை மூலம் நடைபெற்ற ஒத்திகையில் தீ விபத்து, விமான விபத்து போன்ற அவசர காலங்களில் சூழ்நிலையை சமாளித்து பாதுகாப்பாக வெளியேறுவது, பயணிகளை மீட்பது உள்ளிட்டவை குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், விமான நிலையத்துக்கு வந்த வாகனங்களை விமான நிலைய வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழப்பு பிரிவினா் சோதனை செய்து செயல்விளக்கம் அளித்தனா்.

இதில் திருச்சி விமான நிலைய இயக்குநா் ஜி. கோபாலகிருஷ்ணன், மத்திய தொழிலகப் பாதுகாப்பு படை (விமானப் பாதுகாப்புக் குழு) உதவி கமான்டென்ட் ஜெயதீப் சிங் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments