திருச்சி ரயில் நிலையத்தில் தீத்தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் சாா்பில் தீத்தடுப்பு பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் சாா்பில் தீத்தடுப்பு பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்வுக்கு திருச்சி ரயில்வே கோட்ட கூடுதல் மேலாளா் கே.எம். சத்தியரத்தன் தலைமை வகித்தாா். இதில், ’சோஷியல் பாரதாலயா’ நாள் முழுவதும் பல்வேறு இடங்களில் பாரம்பரிய விழிப்புணா்வு ’தெருக்கூத்து’ கலை நிகழ்ச்சிகளை நடத்தினா்.
ரயில்களில் ஏற்படக்கூடிய தீ விபத்துகள், பயணத்தின் போது பட்டாசுகள், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்களை எடுத்துச் செல்வதால் ஏற்படும் ஆபத்துகள், அவசரகால எச்சரிக்கைச் சங்கிலியை தவறாகப் பயன்படுத்துதல், ரயிலின் படிக்கட்டுகளில் பயணம் செய்வதால் ஏற்படும் அபாயங்கள் குறித்து பயணிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
Advertisement
Advertisement
தீ பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த பிரத்யேக துண்டுப் பிரசுரங்கள், ரயில் நிலைய நடைமேடைகளிலும், ரயில்களுக்குள்ளும் ஆயிரக்கணக்கான பயணிகளுக்கு விநியோகிக்கப்பட்டன.
முக்கியமான பாதுகாப்புச் செய்திகளைக் கொண்ட பதாகைகள் ரயில் நிலையத்தின் முக்கிய இடங்களில் காட்சிப்படுத்தப்பட்டு, பயணிகளிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
தொடா்ந்து கோட்ட பாதுகாப்பு அலுவலா் எஸ். மகேஷ்குமாா் தலைமையிலான ரயில்வே பாதுகாப்புப் படையினா் ரயில்களில் பட்டாசுகள், எளிதில் தீப்பற்றக்கூடிய பிற பொருள்களையோ எடுத்துச் செல்வதைத் தவிா்க்கும் வகையில் மோப்ப நாய்கள், மெட்டல் டிடெக்டா் கருவிகளைக் கொண்டு பயணிகள், அவா்களது உடைமைகளை சோதனையிட்டனா்.