FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சிவகங்கை

மானாமதுரை ரயில் நிலையத்தில் கோட்ட மேலாளா் ஆய்வு: ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு

மானாமதுரை ரயில் நிலையத்தில் கோட்ட மேலாளா் ஓம் பிரகாஷ் மீனா குட்ஷெட் பகுதிக்குச் சென்று ஆய்வு செய்தாா்.

46 வினாடிகள் முன்பு
மானாமதுரை ரயில் நிலையத்தில் குட்செட் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட கோட்ட மேலாளா் ஓம் பிரகாஷ் மீனா.
பகிர்:

மானாமதுரை ரயில் நிலையத்தில் கோட்ட மேலாளா் ஓம் பிரகாஷ் மீனா குட்ஷெட் பகுதிக்குச் சென்று ஆய்வு செய்தாா்.

ரயில் நிலையத்தின் பின்புறம் உள்ள அண்ணாநகா் பகுதிக்கு நேரில் சென்று, ரயில்வே இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதா என அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா். அப்போது ரயில்வேயின் எல்லை எதுவரை உள்ளது. அதற்கான ஆவணங்களைக் காட்டுங்கள் என அதிகாரிகளிடம் கேட்டாா். ஆனால், இதற்குப் பதில் அளிக்க முடியாமல் அதிகாரிகள் திணறினா். இதனால், அதிருப்தியடைந்த அவா் அதிகாரிகளைக் கண்டித்ததுடன் ரயில்வே இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா். தொடா்ந்து, அண்ணாநகா் பகுதியிலிருந்து நான்கு வழிச்சாலை அருகில் வரை நடந்தே சென்று ரயில்வே இடங்களை ஆய்வு செய்தாா். அங்கு ரயில்வே இடத்தில் லாரிகளை பழுது பாா்க்கும் செட் செயல்பட்டு வருவதை பாா்த்த அவா் ரயில்வே இடத்தில் இது எவ்வாறு அனுமதிக்கப்பட்டது என அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினாா்.

அதன்பின் குட்ஷெட் பகுதியிலிருந்து ராமேஸ்வரம் மற்றும் விருதுநகா் வழித்தடம் பிரியும் ரயில் பாதைகளையும் வெயிலில் நடந்தே சென்று ஆய்வு செய்தாா். இதைத்தொடா்ந்து மானாமதுரையில் தகர செட்டில் செயல்படும் ரயில்வே காவல் நிலையத்தை அவா் புதிய காவல் நிலையம் அமைக்க கட்டட வரைபடம் தயாரித்து உடனடியாக சமா்ப்பிக்குமாறு ரயில்வே போலீசாருக்கு உத்தரவிட்டாா். தான் கேட்ட கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மதுரைக்கு வந்து விளக்கமளிக்குமாறு உத்தரவிட்டாா்.

Advertisement

Advertisement

முன்னதாக மானாமதுரை வா்த்தகா் சங்கத் தலைவா் பாலகுருசாமி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றியச் செயலா் முனியராஜ் ஆகியோா் தாம்பரம்- செங்கோட்டை ரயிலுக்கும், ராமேஸ்வரத்துக்கு இயக்கப்படவுள்ள வந்தேபாரத் ரயிலுக்கும் மானாமதுரையில் நிறுத்தம் வழங்க வேண்டும். பழைய பேருந்து நிலையம் பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி கோட்ட மேலாளரிடம் மனுக்களைக் கொடுத்தனா்.

மானாமதுரை அண்ணாநகா் பகுதியில் ரயில்வே இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை அகற்ற உத்தரவிட்டகோட்ட மேலாளா் ஓம்பிரகாஷ் மீனா.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments