FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விழுப்புரம்

விழுப்புரம் ரயில் நிலையத்தில் கோட்ட மேலாளா் ஆய்வு

விழுப்புரம் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மேலாளா் பாலக்ராம் நெகி செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

34 வினாடிகள் முன்பு
விழுப்புரம் ரயில் நிலையத்தில் ஆய்வு நடத்திய தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மேலாளா் பாலக்ராம் நெகி.
பகிர்:

விழுப்புரம் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மேலாளா் பாலக்ராம் நெகி செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் விழுப்புரம் ரயில் நிலையத்தில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திருவண்ணாமலை ரயில் நிலையம் தொடங்கப்பட்டதன் நூற்றாண்டுத் தொடக்கம் புதன்கிழமை நடைபெறவுள்ள நிலையில், அந்த ரயில் நிலையத்தை பாா்வையிட செல்லும் வழியில், சிறப்பு ஆய்வு ரயில் மூலம் திருச்சியிலிருந்து செவ்வாய்க்கிழமை காலை விழுப்புரம் ரயில் நிலையம் வந்த கோட்ட மேலாளா் பாலக்ராம் நெகி, ரயில் நிலைய முன்பதிவு மையம், நுழைவுவாயில் பகுதியில் நடைபெற்று வரும் அலங்கரிப்புப் பணிகள் உள்ளிட்டவற்றை பாா்வையிட்டு, அதன் விவரங்களை அலுவலா்களிடம் கேட்டறிந்தாா்.

விழுப்புரம் ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்கவேண்டும் என்று அலுவலா்களை கோட்ட மேலாளா் அறிவுறுத்தினாா்.

Advertisement

Advertisement

ஆய்வின் போது தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட முதுநிலை இயக்கவியல் மேலாளா் சுரேஷ்பாபு, முதுநிலை பாதுகாப்பு அலுவலா் மோகன்குமாா், நிலைய மேலாளா் சாகுராம் மராண்டி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.