சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு ஆயுள் தண்டனை
திருச்சி அருகே சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து திருச்சி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.
திருச்சி அருகே சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து திருச்சி மாவட்ட நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
திருச்சி துறையூா் அருகிலுள்ள பகுதியைச் சோ்ந்த 16 வயது சிறுமியை துறையூா் அழகாபுரி பகுதியைச் சோ்ந்த இ. புதியரசு (23) என்பவா் 29.07.2018 க்கு முன் திருமணம் செய்து கொண்டு, பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.
தகவலறிந்த திருச்சி மாவட்ட குழந்தை திருமணத் தடை பிரிவு சமூக நல அலுவலா் முசிறி அனைத்து மகளிா் காவல்நிலையத்தில் 16.03.2019 அன்று புகாரளித்தாா்.
Advertisement
Advertisement
அதன்பேரில் போலீஸாா், போக்ஸோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, புதியரசை 03.09.2020 அன்று கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இந்த வழக்கை செவ்வாய்க்கிழமை விசாரித்த திருச்சி மகிளா நீதிமன்ற நீதிபதி சண்முகபிரியா குற்றவாளி புதியரசுக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 11 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவு பிறப்பித்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.