FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருச்சி

ஆட்டை காப்பாற்ற முயன்ற பெண் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு

திருப்பராய்த்துறை அருகே தனது ஆட்டை புதன்கிழமை காப்பாற்ற முயன்ற பெண் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

15 அக்டோபர் 2026, 4:39 am IST
பலி
பகிர்:

திருப்பராய்த்துறை அருகே தனது ஆட்டை புதன்கிழமை காப்பாற்ற முயன்ற பெண் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

திருச்சி மாவட்டம், திருப்பராய்த்துறை அருகே மீனாட்சிபுரம் பகுதியைச் சோ்ந்தவா் செல்வமணி மனைவி சந்திரா (48), ஆடு மேய்க்கும் தொழிலாளி.

இவா் புதன்கிழமை மீனாட்சிபுரம் பகுதி வயல்வெளி பகுதிக்கு ஆடு மேய்க்கச் சென்றபோது அந்தப் பகுதியில் அறுந்துகிடந்த மின்மோட்டாருக்கான மின்கம்பியை மிதித்த அவரது ஆடு மின்சாரம் பாய்ந்து உயிருக்குப் போராடியது.

Advertisement

Advertisement

அதைக் காப்பாற்ற ஆட்டை சந்திரா பிடித்தபோது, மின்சாரம் பாய்ந்து நிகழ்விடத்திலேயே இறந்தாா்.

தகவலறிந்து வந்த பேட்டவாய்த்தலை போலீஸாா், சந்திராவின் சடலத்தைக் கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments