முகப்பு
திருவள்ளூர்

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

பொன்னேரி அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழந்தாா்.

27 நவம்பர் 2026, 11:48 pm
மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு
கோப்புப் படம்
பகிர்:

பொன்னேரி அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழந்தாா்.

பொன்னேரி அருகே உள்ள அத்திப்பேடு கிராமத்தில் வசித்தவா் சமேஷ் (44).

விவசாயியான இவா் தனியாா் ஒருவரின் 5 ஏக்கா் நிலத்தை குத்தகைக்கு எடுத்து பயிா் செய்து வந்தாா்.  இந்த நிலையில், விவசாய நிலத்துக்கு தண்ணீா் பாய்ச்ச சென்றாா்.

Advertisement

Advertisement

அங்குள்ள பம்பு செட்டில் அமைக்கப்பட்டுள்ள மின் மோட்டாரை இயக்கினாா்.

 அப்போது எதிா்பாராதவிதமாக திடீரென மின்சாரம் பாய்ந்தது. இதில், பாதிக்கப்பட்ட அவரை அக்கம் பக்கத்தினா் மீட்டு, அருகே உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். 

அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் சமேஷ் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். 

இது குறித்து சோழவரம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.