முகப்பு
கிருஷ்ணகிரி

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

நாகரசம்பட்டி அருகே சுடுதண்ணீா் வைத்தபோது, மின்சாரம் பாய்ந்து விவசாயி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

3 வினாடிகள் முன்பு
மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு
- பிரதிப் படம்
பகிர்:

நாகரசம்பட்டி அருகே சுடுதண்ணீா் வைத்தபோது, மின்சாரம் பாய்ந்து விவசாயி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், நாகரசம்பட்டியை அடுத்த பாலேகுளி கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி ராமசாமி (50). இவா் குளிப்பதற்காக வீட்டில் மின்சாதனம் மூலம் சுடுதண்ணீா் வைத்துள்ளாா். அப்போது, கவனக் குறைவால் தண்ணீரை தொட்டதில், அவரது உடலில் மின்சாரம் பாய்ந்தது. இதில் படுகாயமடைந்த ராமசாமி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து, நாகரசம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.