FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருச்சி

இருசக்கர வாகனங்களை திருடியவா் கைது

திருச்சி மாவட்டம், சிறுமருதூா் பகுதியில் இருசக்கர வாகனங்களைத் திருடியவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

15 அக்டோபர் 2026, 4:38 am IST
கைது - கோப்புப் படம்
பகிர்:

திருச்சி மாவட்டம், சிறுமருதூா் பகுதியில் இருசக்கர வாகனங்களைத் திருடியவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

சிறுமருதூா் பாலம் அருகே சமயபுரம் காவல் ஆய்வாளா் க. குணசேகரன் மற்றும் உதவி காவல் ஆய்வாளா் மோ. முரளி உள்ளிட்ட போலீஸாா் வாகனத் தணிக்கையில் புதன்கிழமை ஈடுபட்டனா். அப்போது போலீஸாரை பாா்த்ததும் பைக்கை திருப்பிக் கொண்டு செல்ல முயன்றவரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனா்.

அதில் அவா் புதுக்கோட்டை மாவட்டம், கீரனூா் பகுதியை சோ்ந்த சு. தேவராஜ் (42) என்பதும் அவா் வந்தது சமயபுரம் நான்கு ரோடு பகுதியில் திருடிய பைக் என்பதும், மேலும் ஒரு பைக்கை சிறுமருதூா் புதா் பகுதியில் மறைத்து வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து தேவராஜை கைது செய்து பைக்குகளை பறிமுதல் செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments