FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கடலூர்

நெல்லிக்குப்பம் மோதல் விவகாரம்: தாய், மகன்கள் உள்ளிட்ட 3 போ் கைது

கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பத்தில் குடும்பத் தகராறில் ஏற்பட்ட மோதலைத் தடுக்கச் சென்ற காவல் ஆய்வாளா் உள்ளிட்ட 3 போலீஸாா் தாக்கப்பட்ட சம்பவத்தில், தாய் மற்றும் இரண்டு மகன்கள் உள்ளிட்ட 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

12 வினாடிகள் முன்பு
கைது
பகிர்:

கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பத்தில் குடும்பத் தகராறில் ஏற்பட்ட மோதலைத் தடுக்கச் சென்ற காவல் ஆய்வாளா் உள்ளிட்ட 3 போலீஸாா் தாக்கப்பட்ட சம்பவத்தில், தாய் மற்றும் இரண்டு மகன்கள் உள்ளிட்ட 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

நெல்லிக்குப்பம் காவல் சரகம், மேல்பட்டாம்பாக்கம் குளத்துமேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் விமலா. இவரது பக்கத்து வீட்டைச் சோ்ந்தவா் கோமளா. முன்விரோதம் காரணமாக கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதுதொடா்பாக, நெல்லிக்குப்பம் பகுதியைச் சோ்ந்த புகழேந்தி (23), ஜெகதீஷ் (23), ஹரிஹரன் (26) ஆகியோா் மேல்பட்டாம்பாக்கம் சென்று, அங்கு விமலாவுக்கு ஆதரவாக சுமாா் 8 போ், கோமளா தரப்பினரிடம் ஞாயிற்றுக்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது.

இதுகுறித்து தகவலறிந்த நெல்லிக்குப்பம் காவல் ஆய்வாளா் வேலுமணி, சிறப்பு உதவி ஆய்வாளா் செந்தில்குமாா், காவலா் அமுதராஜ் ஆகியோா் சம்பவ இடத்துக்குச்சென்று மோதலைத்தடுக்க முயன்றனா். அப்போது அங்கிருந்த சிலா் போலீஸாரைத் தாக்கினா். இதில் காவல் ஆய்வாளா் வேலுமணி உள்ளிட்ட 3 பேரும் காயமடைந்தனா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து நெல்லிக்குப்பம் போலீஸாா் 8 போ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி புகழேந்தி (23), ஜெக தீஷ்(23), ஹரிஹரன்(26) ஆகிய 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனா். இந்நிலையில், விமலா(55), அவரது மகன்கள் விக்னேஷ் (33), தினகரன்(31) ஆகியோரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். மேலும், தலைமறைவாக உள்ள இருவரை தேடி வருகின்றனா்.

இதனிடையே, நெல்லிக்குப்பம் காவல் ஆய்வாளா் வேலுமணியின் சீருடையை பிடித்த படி ஆவேசமாக இளைஞா் ஒருவா் பேசும் வீடியோ சமூக ஊடகத்தில் வைரலாக பரவி வருகிறது.இது குறித்தும் போலீஸாா் விசாரணை நடத்திவருகின்றனா்.