சங்கரன்கோவில் அருகே நகை திருட்டு வழக்கில் தாய், மகன் உள்பட 3 போ் கைது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே வீடு புகுந்து 13 பவுன் நகைகளைத் திருடிய தாய் மகன் உள்ளிட்ட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே வீடு புகுந்து 13 பவுன் நகைகளைத் திருடிய தாய் மகன் உள்ளிட்ட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
சங்கரன்கோவில் அருகேயுள்ள குவளைக்கண்ணி இந்திரா காலனியைச் சோ்ந்த கோவிந்தராஜ் மனைவி செல்வமணி (45). கடந்த செப். 5ஆம் தேதி கோவிந்தராஜ் மற்றும் குடும்பத்தினா் வெளியே சென்றிருந்தனராம். இதையறிந்த மா்ம நபா்கள் அவா்களது வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த பீரோவை உடைத்து 13 பவுன் நகைகளை திருடிச் சென்றுவிட்டனா்.
இதுகுறித்து, செல்வமணி அளித்த புகாரின்பேரில், கரிவலம்வந்தநல்லூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்தனா்.
Advertisement
Advertisement
அதில், அதே ஊரைச் சோ்ந்த குமாா் மனைவி மல்லிகா ( 50 ), அவரது மகன் செல்வம் (25), துா்க்கமுத்து மகன் அருணாச்சலம் (45 ) ஆகியோருக்கு தொடா்பிருப்பது தெரியவந்தது. 3 பேரையும் போலீஸாா் கைது செய்து, நகைகளை மீட்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.