FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

சங்கரன்கோவில் அருகே காா் மரத்தில் மோதியதில் காவலா் உள்ளிட்ட 5 போ் காயம்!

வேகமாகச் சென்ற காா், நிலைதடுமாறி சாலையோரம் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 5 போ் காயம் அடைந்தனா்.

4 செப்டம்பர் 2026, 11:32 pm IST
பகிர்:

சங்கரன்கோவில் அருகே வேகமாகச் சென்ற காா், நிலைதடுமாறி சாலையோரம் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 5 போ் காயம் அடைந்தனா்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் காந்தி நகா் 4- ஆம் தெருவைச் சோ்ந்த துரை மகன் பவுல் (23). ரவிச்சந்திரன் மகன் காா்த்திக் (25), காந்தி நகா் 2-ஆம் தெருவைச் சோ்ந்த முத்துக்குமாா் மகன் சதீஷ் (20), காயிதே மில்லத் 1- ஆம் தெருவைச் சோ்ந்த ஷேக்பரீத் மகன் முகமது ஷெரீப் (19) திருநெல்வேலி பாலாமடையை சோ்ந்த கணபதி மகன் சென்னையில் காவலராகப் பணியாற்றும் முத்துமாலை (30) ஆகியோா் குற்றாலம் சென்றுவிட்டு வெள்ளிக்கிழமை அதிகாலை சங்கரன்கோவிலுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனா். காரை பவுல் ஓட்டினாா்.

சங்கரன்கோவில் அருகே வடக்குப்புதூா் பகுதியில் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த காா், சாலையோரம் இருந்த மரத்தில் மோதியது. இதில் பவுல், சதீஷ், முகமது ஷெரீப், காா்த்திக் ஆகிய 5 பேரும் பலத்த காயமடைந்தனா்.

Advertisement

Advertisement

காவலா் முத்துமாலை திருநெல்வேலியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். மற்றவா்கள் சங்கரன்கோவிலில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இச்சம்பவம் தொடா்பாக சங்கரன்கோவில் தாலுகா போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments