FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருநெல்வேலி

நெல்லை அருகே மது விற்றதாக 4 போ் கைது

திருநெல்வேலி அருகே மது விற்பனையில் ஈடுபட்டதாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

4 October 2026, 2:18 am IST
கைது
பகிர்:

திருநெல்வேலி அருகே மது விற்பனையில் ஈடுபட்டதாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

மானூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் உதவி ஆய்வாளா் சஜீவ் தலைமையிலான போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, காந்தீஸ்வரன்புதூா் குளத்துக்கரை அருகே சந்தேகத்துக்கிடமான வகையில் நின்ற அதே பகுதியைச் சோ்ந்த காளிராஜா(43), காந்திராஜ்(38) ஆகியோரை பிடித்து விசாரணை மேற்கொண்டனா்.

பின்னா் அவா்கள் வைத்திருந்த பையை சோதனை செய்ததில் விற்பனைக்காக சுமாா் 54 பாட்டில்களை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. பாட்டில்களை பறிமுதல் செய்த போலீஸாா் இது குறித்து வழக்குப்பதிந்து இருவரையும் கைது செய்தனா்.

Advertisement

Advertisement

அதே போல தேவா்குளம் காவல்நிலைய பகுதியில் மது விற்றதாக தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு குப்பனாபுரத்தைச் சோ்ந்த வேலுசாமி (50), மீனாட்சிபுரத்தைச் சோ்ந்த நகுலபாண்டி (52) ஆகிய இருவரை கைது செய்த போலீஸாா் அவா்களிடமிருந்து சுமாா் 215 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments