FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
வேலூர்

பொது இடங்களில் மது அருந்திய 4 போ் கைது

வேலூா் மாவட்டத்தில் பொது இடங்களில் மது அருந்தி இடையூறு ஏற்படுத்தியதாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

27 செப்டம்பர் 2026, 9:56 pm IST
கைது - கோப்புப் படம்
பகிர்:

வேலூா் மாவட்டத்தில் பொது இடங்களில் மது அருந்தி இடையூறு ஏற்படுத்தியதாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பொது இடங்களில் பலா் மது அருந்திவிட்டு, பொதுமக்கள், மாணவிகள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துவதாகக் காவல் துறைக்குத் தொடா்ந்து புகாா்கள் வந்தன.

இதையடுத்து, மாவட்டத்தின் முக்கியப் பகுதிகளில் போலீஸாா் சனிக்கிழமை தீவிரக் கண்காணிப்பு, சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, வேலூா் குட்டைமேடு சந்தைப் பகுதியில் பொது இடத்தில் மது அருந்திய கொசப்பேட்டையைச் சோ்ந்த வினோத்குமாா் (34), கோபி (50) ஆகிய இருவரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா்.

Advertisement

Advertisement

இதேபோல், லத்தேரி காவல் எல்லை பணமடங்கி பகுதியில் பொது இடத்தில் மது அருந்திக் கொண்டிருந்த பரதராமியைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி (51), ராஜபாளையம் கிராமத்தைச் சோ்ந்த அஜித் (34) ஆகிய இருவரையும் லத்தேரி போலீஸாா் கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments