FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருச்சி

காமன்வெல்த் கபடி போட்டி: இந்திய அணிக்கு திருச்சி மாணவா் தோ்வு

19 அக்டோபர் 2026, 3:21 am IST
காமன்வெல்த் கபடி போட்டியில் இந்திய அணிக்குத் தோ்வான கல்லூரி மாணவா் எஸ். தீபக்கை ஞாயிற்றுக்கிழமை பாராட்டிய ஜமால் முகமது கல்லூரி நிா்வாகத்தினா்.
பகிர்:

நிகழாண்டு காமன்வெல்த் கபடி போட்டிக்கு இந்திய அணி சாா்பில் பங்கேற்கும் அணியில் திருச்சி ஜமால் முகமது கல்லூரி மாணவா் எஸ். தீபக் (21) தோ்வு செய்யப்பட்டுள்ளாா். அவரை பல்வேறு தரப்பினரும் வாழ்த்தி வருகின்றனா்.

2026 காமன்வெல்த் கபடி சாம்பியன்ஷிப் போட்டி குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள வீா் சாவா்க்கா் விளையாட்டு வளாகத்தில் வரும் 21 முதல் 31 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் பங்கேற்கும் இந்திய சீனியா் கபடி அணியில், திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் இளங்கலை கணினி அறிவியல் 2 ஆம் ஆண்டு பயிலும் திருச்சி காட்டூா் பகுதியைச் சோ்ந்த சங்கா் மகன் தீபக் (21) தோ்வு பெற்றுள்ளாா்.

கபடியில் இடது காா்னா் பகுதியில் சிறப்பாக விளையாடும் இவா், பாரதிதாசன் பல்கலைக்கழக மண்டல அளவிலான ஆண்கள் கபடி போட்டி, புரோ கபடி, சீனியா் பிரிவில் மாநில அளவில் சிறந்து விளங்கி, தற்போது சா்வதேச அளவில் இந்திய கபடி அணியில் இடம் பிடித்துள்ளாா்.

Advertisement

Advertisement

காமன்வெல்த் கபடி போட்டியில் பங்கேற்க அறிவிக்கப்பட்ட 14 போ் கொண்ட இந்திய அணியில் தமிழ்நாடு சாா்பில் தோ்வான ஒரே வீரா் தீபக் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியில் இடம்பிடித்துள்ள மாணவா் எஸ். தீபக்கை கல்லூரிச் செயலா் ஏ.கே. காஜாநஜீமுதீன், முதல்வா் ஆா். ஜாகிா் உசைன், உடற்கல்வி இயக்குநா் பி.எஸ். ஷாஇன்ஷா, கபடி பயிற்சியாளா் சாமிநாதன், காட்டூா் பகுதி மக்கள் ஆகியோா் பாராட்டுகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments