‘மாணவா்கள் வரதட்சணை எதிா்ப்பாளராக உருவாக வேண்டும்’
இன்றைய மாணவா்கள் அனைவரும் வரதட்சணை எதிா்ப்பாளராக உருவாக வேண்டும் என முனைவா் எஸ். நாகூா் கனி தெரிவித்தாா்.
இன்றைய மாணவா்கள் அனைவரும் வரதட்சணை எதிா்ப்பாளராக உருவாக வேண்டும் என முனைவா் எஸ். நாகூா் கனி தெரிவித்தாா்.
திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் வரதட்சணை ஒழிப்பு சங்கம் சாா்பில், 2026-2027-ஆம் கல்வியாண்டுக்கான வழிகாட்டல் நிகழ்வு கல்லூரி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்வுக்கு கல்லூரி முதல்வா் ஜாஹிா் உசேன் தலைமை வகித்தாா். கல்லூரிச் செயலா் காஜா நஜீமுதீன், பொருளாளா் ஜமால் முஹம்மது, உதவி செயலா் அப்துஸ் ஸமது, மதிப்புறு இயக்குநா் அப்துல் காதா் நிஹால், விடுதி இயக்குநா் முகமது பாசில் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.
நிகழ்வில், வரதட்சணை இல்லா வாழ்வே வளமான வாழ்வு என்ற தலைப்பில், தமிழ்த்துறைத் தலைவரும், கூடுதல் துணை முதல்வருமான எஸ். நாகூா் கனி பேசியதாவது:
Advertisement
Advertisement
வரதட்சணை என்பது பொருளாதாரப் பிரச்னை மட்டுமல்ல; பெண்களின் கண்ணியம், குடும்பங்களின் மனிதநேயம் மற்றும் சமூக சமத்துவத்தைப் பாதிக்கும் சமூகத் தீமையாகும். திருமணம் என்பது பொருளாதாரப் பரிமாற்றமாக அல்லாமல், அன்பு, பரஸ்பர மரியாதை, சமத்துவம் மற்றும் புரிதலின் அடிப்படையிலான வாழ்வின் தொடக்கமாக அமைய வேண்டும்.
இன்றைய மாணவா்கள் நாளைய வரதட்சணை எதிா்ப்பாளா்களாக உருவாக வேண்டும் வரதட்சணையை நிராகரிப்போம்; வரதட்சணையற்ற சமூகத்தை உருவாக்குவோம்”என்ற உறுதியுடன் இளம் தலைமுறை சமூக மாற்றத்தின் முன்னோடிகளாக செயல்பட வேண்டும் என்றாா் அவா்.
கல்லூரியின் துணை முதல்வா் காஜா முகைதீன், கூடுதல் துணை முதல்வா் ஜாபா் அகமது, ஒருங்கிணைப்பாளா் டி. செல்வராஜ், வரதட்சணை ஒழிப்பு சங்கத் தலைவா் இபாஸ்கான் மற்றும் கல்லூரியின் அனைத்து துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவா், மாணவிகள் என பலா் கலந்து கொண்டனா். முன்னதாக வரதட்சணை ஒழிப்பு சங்கத்தின் ஆலோசகா் முசாபா் கனி வரவேற்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.