FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருச்சி

ஸ்ரீரங்கம் நம்பெருமாளுக்கு தங்கக் குடத்தில் திருமஞ்சனம்

19 அக்டோபர் 2026, 3:40 am IST
கோப்புப் படம்
பகிர்:

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் துலா மாதம் எனும் ஐப்பசி மாதப் பிறப்பையொட்டி ஞாயிற்றுக்கிழமை காலை காவிரி ஆற்றிலிருந்து திருமஞ்சனம் எடுத்து வரப்பட்டு அபிஷேகம் நடைபெற்றது.

துலா மாதம் எனப்படும் ஐப்பசி மாதத்திற்குரிய ஆறு காவிரி ஆறாகும். இந்த மாதத்தில் காவிரி ஆற்றில் புனித நீராடினால் நற்பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம். மேலும், ஐப்பசி மாதம் முழுவதும் ஸ்ரீரங்கம் நம்பெருமாளுக்கு காவிரி ஆற்றிலிருந்து தங்கக் குடத்தில் திருமஞ்சனம் எடுத்து செல்லப்பட்டு அபிஷேகம் நடைபெறும்.

அதன்படி ஞாயிற்றுக்கிழமை ஐப்பசி மாதப் பிறப்பையொட்டி காலை 6 மணிக்கு கோயிலிருந்து ஒரு தங்கக் குடம் மற்றும் இரு வெள்ளிக்குடங்கள் எடுத்து வரப்பட்டு அம்மாமண்டபம் காவிரி ஆற்றில் திருமஞ்சனம் (புனித நீா்) சேகரிக்கப்பட்டது. தொடா்ந்து யானை ஆண்டாள் மீது தங்கக் குடம் வைத்தும் மற்ற இரு வெள்ளிக்குடங்களை தோளில் சுமந்தும், மங்கள வாத்தியங்கள் முழங்க ஊா்வலமாக கோயிலுக்கு எடுத்து வரப்பட்டு நம்பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்யப்பட்டது.

Advertisement

Advertisement

ஐப்பசி மாதம் தவிர மற்ற அனைத்து மாதங்களிலும் வட காவிரி என அழைக்கப்படும் கொள்ளிடம் ஆற்றில் திருமஞ்சனம் எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments