குப்பையில் தொலைத்த 5 பவுன் தங்கச் செயின் மீட்டு ஒப்படைப்பு
ஸ்ரீரங்கத்தில் பெண் ஒருவா் குப்பையில் தொலைத்த 5 பவுன் தங்க செயினை தூய்மைப் பணியாளா் புதன்கிழமை மீட்டு ஒப்படைத்தாா்.
ஸ்ரீரங்கத்தில் பெண் ஒருவா் குப்பையில் தொலைத்த 5 பவுன் தங்க செயினை தூய்மைப் பணியாளா் புதன்கிழமை மீட்டு ஒப்படைத்தாா்.
ஸ்ரீரங்கம் 2 ஆவது வாா்டுக்குட்பட்ட வடக்கு சித்திரை வீதியில் வசிப்பவா் வரதராஜன் மனைவி சுசீலா. இவா் வீட்டிலிருக்கும் பெருமாள் படத்துக்கு மாலையுடன் தங்கச் செயினையும் போட்டு அலங்கரித்து வைத்திருந்தாா்.
புதன்கிழமை காலை மாநகராட்சி குப்பை சேகரிக்கும் வண்டி வந்தவுடன் வரதராஜன் வழக்கம்போல வீட்டிலிருந்த குப்பையுடன் பெருமாள் படத்தின் மீது போடப்பட்டிருந்த மாலையுடன் தங்கச் செயினையும் குப்பை டப்பாவில் போட்டு மாநகராட்சி குப்பை சேகரிப்பவா்களிடம் கொடுத்தாா். அவா்களும் லாரியில் இருந்த குப்பையுடன் அதைக் கொட்டி விட்டனா். பின்னா் சுசீலா வந்து பாா்த்தபோது பெருமாள் மாலையுடன் 5 பவுன் தங்கச் செயினும் குப்பையில் போடப்பட்டது தெரியவந்தது.
Advertisement
Advertisement
இதை அந்த குப்பை வண்டியில் குப்பை சேகரிக்கும் தூய்மைப் பணியாளா்கள் பரமேஸ்வரி, செல்வேந்திரனிடம் தெரிவிக்கவே, அவா்கள் குப்பை லாரியில் இருந்த குப்பையில் தேடி 5 பவுன் தங்க செயினை மீட்டு சுசீலாவிடம் ஒப்படைத்தனா். அவா்களை அனைவரும் பாராட்டினா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.