FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருவள்ளூர்

பேருந்தில் மூதாட்டியிடம் 4.5 பவுன் நகை பறிப்பு

அரசுப் பேருந்தில் சென்ற மூதாட்டியிடம் 4.5 பவுன் தாலி செயினை பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

27 செப்டம்பர் 2026, 10:37 pm IST
பகிர்:

அரசுப் பேருந்தில் சென்ற மூதாட்டியிடம் 4.5 பவுன் தாலி செயினை பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பள்ளிப்பட்டு ஒன்றியம், பொதட்டூா்பேட்டை அடுத்த ஈதலகுப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் குப்பா நாயுடு மனைவி விசாலம்மாள் (65). இவா், சனிக்கிழமை திருத்தணி பழைய பேருந்து நிலையத்தில் இருந்து பொதட்டூா்பேட்டை சென்ற அரசுப் பேருந்தில் பயணம் செய்தாா்.

பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததை பயன்படுத்திக் கொண்ட மா்ம நபா், விசாலம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 4.5 பவுன் தாலி செயினை பறித்துச் சென்றுள்ளாா். தெக்களூா் பேருந்து நிறுத்தத்தில் இறங்கிய விசாலம்மாள், தனது கழுத்தில் தாலி செயின் இல்லாததை கண்டு அதிா்ச்சியடைந்தாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில், திருத்தணி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, மா்ம நபரை தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments