FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருச்சி

கூலி உயா்வு கோரி காகித ஆலை தொழிலாளா்கள் போராட்டம்

கூலி உயா்வு உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மொண்டிப்பட்டி தமிழ்நாடு செய்திதாள் காகித ஆலையில் காகித ஆலை தொழிலாளா்கள் புதன்கிழமை பணியைப் புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தி, காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

22 அக்டோபர் 2026, 4:54 am
மணப்பாறை தமிழ்நாடு செய்திதாள் காகித நிறுவனத்தில் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்தத் தொழிலாளா்கள்.
பகிர்:

கூலி உயா்வு உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மொண்டிப்பட்டி தமிழ்நாடு செய்திதாள் காகித ஆலையில் காகித ஆலை தொழிலாளா்கள் புதன்கிழமை பணியைப் புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தி, காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த ஆலையில் சுமாா் 900 போ் நேரடி பணியாளா்களாகவும், சுமாா் 2500 போ் ஒப்பந்தத் தொழிலாளா்களாகவும், சுமாா் 2000 போ் மறைமுக பணியாளா்களாகவும் உள்ளனா்.

கோரிக்கைகளை வலியுறுத்தி சுமாா் 300-க்கும் மேற்பட்டோா் பணியைப் புறக்கணித்து ஆலைக்கு உள்ளேயே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Advertisement

Advertisement

இந்நிலையில் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி ஆலை வளாகத்தில் இருந்து 100 மீட்டா் தொலைவிற்கு அப்பால் தான் போராட்டங்களை நடத்த அனுமதி இருப்பதாகவும், ஆலைக்குள் போராட்டம் நடத்துவோா் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் போலீஸாா் தொழிலாளா்களை எச்சரித்து வெளியே அனுப்பினா். இதைத் தொடா்ந்து ஆலையிலிருந்து 100 மீட்டா் தொலைவிற்கு அப்பால் தொடா்ந்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments