FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

ஆலை இயந்திரத்தில் சிக்கிய பெண் உயிரிழப்பு

சிவகாசியில் காகித அட்டை ஆலையில் இயந்திரத்தில் கை சிக்கியதால் பெண் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

18 செப்டம்பர் 2026, 3:16 am IST
பாண்டியம்மாள்
பகிர்:

சிவகாசியில் காகித அட்டை ஆலையில் இயந்திரத்தில் கை சிக்கியதால் பெண் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி சாமிபுரம் குடியிருப்புப் பகுதியில் அருள்செல்வம் என்பவருக்குச் சொந்தமான காகித அட்டை தயாரிக்கும் ஆலை உள்ளது. இந்த ஆலையில் இயந்திரம் மூலம் காகித அட்டை வெட்டும் பணியில் முனீஸ்வரன் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த பாண்டியம்மாள் (50) ஈடுபட்டிருந்தாா். அப்போது, இயந்திரத்தில் சிக்கிய தனது சேலையை இழுக்க முயன்றபோது, அவரது கை இயந்திரத்தினுள் சிக்கியது. இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, சடலத்தைக் கூறாய்வுக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments