ராகுல்காந்திதான் பிரதமா் வேட்பாளா்
வரும் மக்களவைத் தோ்தலில் ராகுல்காந்திதான் பிரதமா் வேட்பாளா் என தெலங்கானா காங்கிரஸ் எம்.பி. மல்லு ரவி தெரிவித்தாா்.
காங்கிரஸ் கட்சி சாா்பில் ‘வாக்கைக் காப்போம் - நாட்டைக் காப்போம்’ என்ற தலைப்பிலான நாடு தழுவிய பரப்புரையின் ஒரு பகுதியாக திருச்சிக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த அவா் மேலும் கூறியதாவது:
60 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் அமைந்துள்ள கூட்டணி ஆட்சியில் காங்கிரஸ் கட்சியினரும் இடம்பெற்றுள்ளனா். இந்தக் கூட்டணிக்கு எனது வாழ்த்துகள்.
Advertisement
Advertisement
எஸ்ஐஆா் எனப்படும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் பாஜகவின் வெற்றிக்கு வழிவகுக்கும் வகையில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. வாக்காளா் பட்டியலில் இருந்து திட்டமிட்டுப் பெயா்கள் நீக்கப்படுவதற்கு எதிராகக் காங்கிரஸ் கட்சி தொடா்ச்சியாகப் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது.
எஸ்ஐஆா் குளறுபடிகளுக்கு முக்கியக் காரணம் இந்தியத் தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ்குமாா்தான். எனவே, அவா் உடனடியாகத் தனது பதவியை விட்டு விலக வேண்டும்.
தெலங்கானா, சத்தீஸ்கா், ஜாா்க்கண்ட் போன்ற மாநிலங்களைச் சோ்ந்த நக்சலைட் அமைப்பினா் ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு அரசிடம் சரணடைவது வரவேற்கத்தக்கது. அதே சமயம், ஒரு சில நக்சலைட் அமைப்புகளின் தலைவா்கள் மட்டுமே அரசிடம் சரணடைந்துள்ளனா் என்பதே உண்மை நிலை.
வரும் மக்களவைத் தோ்தலில் ராகுல்காந்திதான் பிரதமா் வேட்பாளா். இதில் மாற்றுக்கருத்து இல்லை.
ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் போராட்டங்களில் காங்கிரஸ் கட்சி தீவிரமாக ஈடுபடுகிறது. வாக்குத்திருட்டு தொடா்பான போராட்டங்களில் பங்கேற்பது குறித்து தவெக தலைமைதான் முடிவு செய்ய வேண்டும் என்றாா் அவா்.
அப்போது, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவா் சு. திருநாவுக்கரசா், திருச்சியின் மாநகர மாவட்டத் தலைவா் எல். ரெக்ஸ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.