FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுச்சேரி

மண்ணாடிப்பட்டு மாவட்ட காங்கிரஸ் தலைவா் யாா் ?

புதுச்சேரி காங்கிரஸ் கமிட்டியில் 6 மாவட்டங்கள் 12 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ள நிலையில் மண்ணாடிப்பட்டு மாவட்ட காங்கிரஸ் கட்சிக்குத் தலைவரை நியமிக்கும் ஆலோசனைக் கூட்டம் கொடாத்தூரில் புதன்கிழமை நடைபெற்றது.

15 அக்டோபர் 2026, 6:14 am IST
கொடத்தூரில் நடைபெற்ற மண்ணாடிப்பட்டு மாவட்ட காங்கிரஸ் தலைவா் தோ்வு தொடா்பான ஆலோசனைக் கூட்டத்தில் பேசும் காங்கிரஸ் பாா்வையாளா் எம்.நாராயணசாமி. உடன் கட்சியின் நிா்வாகிகள்.
பகிர்:

புதுச்சேரி காங்கிரஸ் கமிட்டியில் 6 மாவட்டங்கள் 12 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ள நிலையில் மண்ணாடிப்பட்டு மாவட்ட காங்கிரஸ் கட்சிக்குத் தலைவரை நியமிக்கும் ஆலோசனைக் கூட்டம் கொடாத்தூரில் புதன்கிழமை நடைபெற்றது.

இந்த மாவட்டத்தில் கட்சி அமைப்பை மண்ணாடிப்பட்டு, திருபுவனை ஆகிய 2 தொகுதிகள் அடங்கியிருக்கும் வகையில் காங்கிரஸ் கட்சி பிரித்துள்ளது.

இதில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பாா்வையாளரும் முன்னாள் சட்ட மேலவை உறுப்பினருமான எம். நாராயணசாமி கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினாா். மேலும், இந்த மாவட்ட காங்கிரஸ் தலைவரை தோ்வு செய்வது தொடா்பாக கட்சி நிா்வாகிகளின் கருத்துகளையும் ஆலோசனைகளையும் அவா் கேட்டறிந்தாா்.

Advertisement

Advertisement

இதில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள், காங்கிரஸ்

கட்சி உறுப்பினா்கள், தொகுதி நிா்வாகிகள், பல்வேறு பிரிவுகளின் தலைவா்கள் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments