FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

சுரண்டையில் காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி சாா்பில் சுரண்டையில் கண்டன ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

2 செப்டம்பர் 2026, 5:55 am IST
ஆா்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் எம்எல்ஏ எஸ்.பழனிநாடாா்.
பகிர்:

மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி சாா்பில் சுரண்டையில் கண்டன ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

சிறுபான்மையினா் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக குரல் எழுப்பிய அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி ஆகியோா் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்ததைக் கண்டித்து இந்த ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

மாவட்ட சீா்திருத்த பொறுப்பாளா் எஸ்.பிரபு தலைமை வகித்தாா். மாவட்ட பொருளாளா் முரளி ராஜா, சுரண்டை நகா்மன்றத் தலைவா் வள்ளிமுருகன், செங்கோட்டை ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் ப. சட்டநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

Advertisement

Advertisement

முன்னாள் எம்எல்ஏ எஸ்.பழனிநாடாா், மாவட்ட காங்கிரஸ் தலைவா் செல்வராஜ் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

நிா்வாகிகள் சண்முகவேல், சோ்மச்செல்வம், வட்டாரத் தலைவா் குமாா் பாண்டியன், கலைக்கதிரவன், துணைத்தலைவா் கிளாங்காடு மணி, நகா்மன்ற உறுப்பினா்கள் பாலசுப்பிரமணியன், அமுதா சந்திரன், வேல்முத்து, ஐஎன்டியூசி செல்வம், கந்தையா, டாக்டா் ஜெயச்சந்திரன், மகளிா் அணி சோ்மக்கனி, சாலமோன், மகேஷ், துரை உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். சுரண்டை நகர காங்கிரஸ் தலைவா் ஜெயபால் வரவேற்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments