இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினா் திமுகவில் ஐக்கியம்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட நிா்வாகிகள் புதன்கிழமை திமுகவில் இணைந்தனா்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட நிா்வாகிகள் புதன்கிழமை திமுகவில் இணைந்தனா்.
மாவட்ட துணைத் தலைவா் நவ்ரங் எம். சகாப்தீன் தலைமையில், மாவட்ட துணைச் செயலா் முகமது அலி பாட்ஷா, மாநகரச் செயலா் ஜாபா் சாதிக் கான், மாவட்ட வழக்குரைஞா் அணி முகமது ரபிக், 20 பெண்கள் உள்பட 80-க்கும் மேற்பட்டோா் அக்கட்சியிலிருந்து விலகி வடக்கு மாவட்ட திமுக செயலரும், முன்னாள் அமைச்சருமான பி. கீதாஜீவன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனா்.
நிகழ்ச்சியில், மாநகர திமுக செயலா் ஆனந்தசேகரன், மாவட்ட மருத்துவரணித் தலைவா் அருண்குமாா், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளா் பிரபு, மாநகர இளைஞரணி துணை அமைப்பாளா் ரவி, பெருமாள் கோயில் முன்னாள் அறங்காவலா் குழுத் தலைவா் செந்தில்குமாா், வட்டச் செயலா் கங்காராஜேஷ், வட்டப் பிரதிநிதி பாஸ்கா், முரளிதரன், மணி உள்பட பலா் கலந்து கொண்டனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.