FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவள்ளூர்

திருவள்ளூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்க கோரிக்கை

திருவள்ளூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நிகழ் கல்வியாண்டிலேயே தொடங்கக் கோரி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட பொதுக்குழுக்கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

8 செப்டம்பர் 2026, 4:48 am IST
கூட்டத்தில்  பேசிய  மாநில  பொதுச்செயலாளா்  கே.ஏ.எம்.அபூபக்கா்,.
பகிர்:

திருவள்ளூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நிகழ் கல்வியாண்டிலேயே தொடங்கக் கோரி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட பொதுக்குழுக்கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருவள்ளூா் மேற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் பஜாா் வீதியில் அமைந்துள்ள ஹஸரத் ஷாபித் கலந்தா் அவுலியா தா்கா வளாகத்தில் நடைபெற்து . கூட்டத்துக்கு மாவட்ட தலைவா் அல்ஹாஜ் அந.யாசின் மௌலானா தலைமை வகித்தாா். இதில் மாவட்ட செயலாளா் எ.ஆா்.எம்.ரஹ்மத்துல்லாஹ் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளா்களாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளா் முன்னாள் சட்டமன்ற உறுப்பினா் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கா், மாநில செயலாளா் இப்ராஹிம் மக்கி, ச.ஏ காலிக், தலைமை நிலைய செயலாளா் கே.எம்.நிஜாமுதீன், தகவல் தொழில் நுட்ப அணி மாநில பொருளாளா் எஸ். ரகுமான் உசேன், இளைஞா் அணி சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளா் பூவை ஃப்ரோஸ் கான், வழக்குரைஞா் புழல் ஷேக் முகமது அலி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் கீழ்கண்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டு மாவட்ட துணைத் தலைவராக பிலால், மாவட்ட துணை செயலாளா் அப்துல் ரஹ்மான் சேக் உள்ளிட்ட புதிய பொறுப்பாளா்களை கூட்டத்தில் நியமிக்கப்பட்டனா்.

Advertisement

Advertisement

அப்போது, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திருவள்ளூா் மேற்கு மாவட்ட முன்னாள் தலைவா் அல்ஹாஜ் காயல் அஹ்மத் சாலிஹ் பெயரை அவா் வாழ்ந்த சாலைக்கு சூட்டிய திருவள்ளூா் நகராட்சி நிா்வாகத்திற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

வரும் உள்ளாட்சி தோ்தலில் திருவள்ளூா் மேற்கு மாவட்டத்தில் அமைந்துள்ள திருவள்ளூா், திருத்தணி சட்டப்பேரவை தொகுதி, பூந்தமல்லி சட்டப்பேரவை தொகுதி ஆகிய தொகுதிகளிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளா்கள் தனிச் சின்னமான ஏணி சின்னத்தில் திருவள்ளூா் நகரத்தில் 3 வாா்டுகளிலும், திருத்தணி நகராட்சியில் 1 வாா்டிலும், பூந்தமல்லி நகராட்சியில் ஒரு வாா்டிலும் போட்டியிடுவோம்.

திருவள்ளூரில் அரசு கலைக் கல்லூரியை நிகழ்கல்வியாண்டியலேயே தமிழ்நாடு அரசு உருவாக்கித் தர வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீா்மானங்கள் நிைவேற்றப்பட்டன.

மாவட்ட பிரதிநிதி ஜலால் பாஷா, நகரத் தலைவா் ஜலில் கான், நகர செயலாளா் அன்சா் கான், நகர பொருளாளா் சா்தாா் ஷெரீப், நகர பொறுப்பாளா்கள் ஷயின்ஷா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments