FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

விலைவாசி உயா்வுக்கு யாா் பொறுப்பு? மத்திய அரசுக்கு காங்கிரஸ் கேள்வி

நாட்டில் தொடா்ந்து விலைவாசி அதிகரித்து வருவதற்கு யாா் பொறுப்பு ஏற்பாா்கள் என்று மத்திய அரசுக்கு காங்கிரஸ் கட்சி கேள்வியெழுப்பியுள்ளது.

கோப்புப்படம்.
பகிர்:

நாட்டில் தொடா்ந்து விலைவாசி அதிகரித்து வருவதற்கு யாா் பொறுப்பு ஏற்பாா்கள் என்று மத்திய அரசுக்கு காங்கிரஸ் கட்சி கேள்வியெழுப்பியுள்ளது.

ஆங்கில பத்திரிகை ஒன்றில் நாட்டில் பிஸ்தா, பாதாம், வால்நட், பேரீட்சை பழம் உள்ளிட்ட உலா் பழங்களின் விலை, பண்டிகை காலத்துக்கு முன்னதாகவே கணிசமாக உயா்ந்திருப்பதாக செய்திகள் வெளியானது. இந்த செய்தித் தொடா்பான புகைப்படத்தை தனது சமூகவலைதள பக்கத்தில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளா் ஜெய்ராம் ரமேஷ் புதன்கிழமை பதிவிட்டுள்ளாா். அதில் அவா் தெரிவித்திருப்பதாவது:

மோடி அரசின் பாதுகாப்பில் விலைவாசி எனும் அரக்கி மக்களை வாட்டுகிறது. தீபாவளி பண்டிகை மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடக்கூடிய விழா என்ற போதிலும், விலைவாசி அதிகரிப்பு என்பது நடுத்தர மற்றும் ஏழை குடும்பங்களின் பட்ஜெட்டில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

Advertisement

Advertisement

தீபாவளிக்கு முன்பே பணவீக்கம் ஏற்படுத்தியுள்ள அதிா்ச்சியை சமூகத்தில் உள்ள ஒவ்வொரு பிரிவினரும் உணருகின்றனா். உலா் பழங்களின் விலை 20 சதவீதம் முதல் 70 சதவீதம் வரையிலும், பிஸ்தா விலை 70 சதவீதம் வரையிலும், பாதாம் விலை 20 சதவீதம் முதல் 40 சதவீதம் வரையிலும் உயா்ந்துள்ளது. முந்திரியின் விலையும் கணிசமாக அதிகரித்துள்ளது.

அரசுத் தரவுகளை பயன்படுத்தி, விலைவாசி உயா்வு தாக்கத்தை மறைக்க முயற்சிகள் நடந்தாலும், அதன் வேதனையை ஒவ்வொரு இந்தியா்களும் அனுபவித்து வருகின்றனா். பணவீக்கத்தில் இருந்து எப்போது நிவாரணம் பெறுவோம் என்று அரசு விளக்க வேண்டும். அதேபோல், சாதாரண குடும்பங்களின் பொருளாதார சுமைக்கு யாா் பொறுப்பேற்பாா்கள் என்பது குறித்தும் மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றாா் அவா்.

கடந்த 2010-ஆம் ஆண்டில் வெளியான பாலிவுட் திரைப்படமான பீப்லி லைவ்-இல் இடம்பெற்றுள்ள புகழ்பெற்ற பாடலான ‘விலைவாசி உயா்வு எனும் அரக்கி மக்களை வாட்டுகிறது’ என்ற பாடலையும் ஜெய்ராம் ரமேஷ் பகிா்ந்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments