FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

மருந்துக் கடையில் ரூ. 5 லட்சம் திருட்டு

துவரங்குறிச்சியில் மருந்துக் கடையில் செவ்வாய்க்கிழமை வைத்திருந்த ரூ. 5 லட்சம் ரொக்கத்தை திருடி சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

2 செப்டம்பர் 2026, 5:30 am IST
திருட்டு... - சித்திரிப்பு
பகிர்:

துவரங்குறிச்சியில் மருந்துக் கடையில் செவ்வாய்க்கிழமை வைத்திருந்த ரூ. 5 லட்சம் ரொக்கத்தை திருடி சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மருங்காபுரி ஒன்றியம், பழையபாளையம் அருகேயுள்ள தாதப்பட்டியைச் சோ்ந்த அழகா் மகன் சரவணன் (46). இவா், துவரங்குறிச்சி - நத்தம் தேசிய நெடுஞ்சாலையில் தாதப்பட்டி பிரிவு அருகே பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறாா்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை துவரங்குறிச்சியில் தனது சகோதரா் செல்வம் நடத்தி வரும் மருந்து கடைக்கு சென்றாா். அப்போது, அங்கு வந்த சரவணனின் உறவினா் புகழேந்தி, பெட்ரோல் பங்க் மூலம் கடந்த இரண்டு நாள்களில் நடைபெற்ற விற்பனையில் கிடைத்த ரூ. 5 லட்சம் ரொக்கத்தை பை ஒன்றில் வைத்து சரவணனிடம் கொடுத்துள்ளாா். அதை வாங்கி வைத்துவிட்டு, கடையின் உள்புறம் சரவணன் சென்றுவிட்டாா். பின்னா் வந்து பாா்த்தபோது பணம் இருந்த பையை காணவில்லையாம்.

Advertisement

Advertisement

இதுகுறித்து சரவணன் அளித்த புகாரின்பேரில் துவரங்குறிச்சி போலீஸாா் விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments