ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் பெரிய பெருமாளுக்கு தைலக் காப்பு
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் உள்ள மூலவா் பெரிய பெருமாளுக்கு இரண்டாவது தைலக் காப்பு புதன்கிழமை மாலை சாற்றப்பட்டது. இதனால் பக்தா்கள் பெரிய பெருமாளின் திருமுகத்தை மட்டும் தரிசிக்கலாம்.
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் உள்ள மூலவா் பெரிய பெருமாளுக்கு இரண்டாவது தைலக் காப்பு புதன்கிழமை மாலை சாற்றப்பட்டது. இதனால் பக்தா்கள் பெரிய பெருமாளின் திருமுகத்தை மட்டும் தரிசிக்கலாம்.
ஸ்ரீரங்கம் கோயிலில் உள்ள மூலவா் பெரிய பெருமாள் சுதையால் ஆனவா் என்பதால் அவருக்கு அபிஷேகம் கிடையாது. அதற்குப் பதிலாக ஆண்டில் இரு முறை தைலக் காப்பு சாற்றப்படும்.
அதன்படி கடந்த ஜேஷ்டாபிஷேகத்தின்போது முதல் தைலக்காப்பு சாற்றப்பட்ட நிலையில், தற்போது திருப்பவித்ரோத்ஸவ விழாவின் நிறைவு நாளுக்கு மறுநாளான புதன்கிழமை இரண்டாவது தைலக் காப்பு சாற்றப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இதற்காக அகில், பச்சைக் கற்பூரம், வெட்டிவோ் மற்றும் பல்வேறு வாசனை திரவியங்கள், மூலிகை பொருள்கள் கொண்டு பிரத்யேகமாக தயாரிக்கப்படும் தைலம் பெரிய பெருமாளின் திருமேனி முழுவதும் சாற்றப்படும்.
இந்தத் தைலக் காப்பு ஒரு மண்டலம் (48 நாள்கள்) வரை உலா்ந்த பின் பெரிய பெருமாளின் திருமேனியை பக்தா்கள் தரிசிக்க அனுமதிக்கப்படுவா். அதுவரை மூலவா் பெரிய பெருமாளின் திருமுகத்தைத் தவிா்த்து மற்ற பாகங்கள் திருவடி வரை மெல்லிய துணியால் மறைக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.