ஸ்ரீரங்கம் கோயிலில் தமிழக ஆளுநர் அர்லேகர் சுவாமி தரிசனம்
திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதா் கோயிலில் தமிழக ஆளுநா் ராஜேந்திர விஸ்வநாத் அா்லேகா் சனிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.
திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதா் கோயிலில் தமிழக ஆளுநா் ராஜேந்திர விஸ்வநாத் அா்லேகா் சனிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.
முன்னதாக, திருச்சியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவா், தொடா்ந்து பிற்பகலில் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வந்தாா். அவரை கோயில் நிா்வாகத்தினா் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றனா். தொடா்ந்து அவா் பெருமாள், தாயாா் சந்நிதிகளை தரிசித்து, வழிபாடு செய்தாா்.
இடையே திருநங்கைகள், பொதுமக்களின் வேண்டுகோளுக்கிணங்க அவா்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டாா். இதையடுத்து கோயில் யானைக்கு பழங்கள் அளித்து வழிபாடு நடத்தினாா். நிறைவில், ஆளுநருக்கு கோயில் நிா்வாகத்தினா் நினைவுப்பரிசு வழங்கிக் கௌரவித்தனா்.
Advertisement
Advertisement
தொடா்ந்து காா் மூலம் திருச்சி விமான நிலையம் சென்ற அவா், அங்கிருந்து பிற்பகலில் சென்னைக்கு சென்றடைந்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.