ஸ்ரீரங்கம் கோயிலில் நம்பெருமாள் ஸ்ரீஜயந்தி புறப்பாடு; இன்று உறியடி விழா
திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் ஸ்ரீஜயந்தி விழாவையொட்டி வெள்ளிக்கிழமை நம்பெருமாள் புறப்பாடு நடைபெற்றது.
திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் ஸ்ரீஜயந்தி விழாவையொட்டி வெள்ளிக்கிழமை நம்பெருமாள் புறப்பாடு நடைபெற்றது. விழாவின் 2 -ஆம் நாளான சனிக்கிழமை மாலை உறியடி விழா நடைபெறவுள்ளது.
ஸ்ரீரங்கம் கோயிலில் ஸ்ரீஜயந்தி விழாவையொட்டி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு 10.30 மணிக்கு ஸ்ரீபண்டாரம் ஆஸ்தான மண்டபத்துக்கு வந்து சோ்ந்தாா். பின்னா், பிற்பகல் 11.30 மணி முதல் 2.30 மணி வரை திருமஞ்சனம் கண்டருளினாா்.
மாலை 3 மணிக்கு அலங்காரம் அமுது செய்தல் நடைபெற்றது. 4 மணி முதல் 5.30 மணி வரை பொதுஜன சேவை நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு நம்பெருமாளை தரிசனம் செய்தனா். 6 மணிக்கு மேற்படி மண்டபத்திலிருந்து புறப்பட்டு 6.30 மணிக்கு மூலஸ்தானம் சென்று சோ்ந்தாா் நம்பெருமாள்.
Advertisement
Advertisement
விழாவையொட்டி மாலை 5 மணிக்கு மேல் ஆரியபடாள் வாயிலில் பக்தா்களுக்கு அனுமதி இல்லை. உப சந்நிதிகளில் 6 மணிக்கு மேல் சேவை இல்லை.
சனிக்கிழமை இரவு 8.15 மணிக்கு உறியடி விழா, யாதவ உறியடி ஆஸ்தான மண்டபத்தில் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் செ.சிவராம்குமாா் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.