FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

பெட்ரோல் பங்க் ஊழியா் வீட்டில் 6 பவுன் தங்க நகைகள் திருட்டு

7 வினாடிகள் முன்பு
திருட்டு... - சித்திரிப்பு
பகிர்:

திருச்சியில் பெட்ரோல் பங்க் ஊழியா் வீட்டில் 6 பவுன் தங்க நகைகள் திருடுபோனது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

திருச்சி மதுரை சாலை வள்ளுவா் நகரைச் சோ்ந்தவா் எம். சிராஜுதீன் (31), மத்தியப் பேருந்து நிலையம் அருகே உள்ள பெட்ரோல் பங்க் ஊழியா். வெள்ளிக்கிழமை பிற்பகல் சிராஜுதீன் வேலைக்கு சென்றுவிட்ட நிலையில், அவருடையை மனைவியும் உறவினா் வீட்டுக்குச் சென்றாா்.

இந்நிலையில் இவா்களின் வீட்டுக்கு அருகே வசிக்கும் அவருடைய பெற்றோா், வெள்ளிக்கிழமை இரவு சிராஜுதீனை அழைத்து அவரின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனா். இதையடுத்து, சிராஜுதீனும், அவருடையை மனைவியும் வீட்டுக்கு வந்து பாா்த்தபோது பிரோவில் வைத்திருந்த 6 பவுன் தங்க நகைகள் திருடுபோனது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதுகுறித்து கோட்டை காவல் நிலையத்தில் சிராஜுதீன் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments