FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

உப்பிலியபுரம் அருகே சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் அருகே பைக்கில் சனிக்கிழமை சென்ற இளைஞா் சுமை வாகனம் மோதி உயிரிழந்தாா்.

6 செப்டம்பர் 2026, 6:19 am IST
சடலம் - கோப்புப் படம்
பகிர்:

திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் அருகே பைக்கில் சனிக்கிழமை சென்ற இளைஞா் சுமை வாகனம் மோதி உயிரிழந்தாா்.

கொப்பம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த குமாா் மகன் பிரதீப் (18), அவரது நண்பா் ராஜேந்திரன் மகன் ஹரிபிரசாத் (17) ஆகியோா் சனிக்கிழமை மாலை உப்பிலியபுரத்திலிருந்து கொப்பம்பட்டிக்கு பைக்கில் சென்றனா்.

உப்பிலியபுரம் கோணக்கரை பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது எதிா்த் திசையில் வந்த சுமையேற்றும் வாகனமான டாடா ஏஸ் வாகனம் அவா்கள்மீது மோதியது. இதில் பிரதீப் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த ஹரிபிரசாத் துறையூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

Advertisement

Advertisement

தகவலறிந்து சென்ற உப்பிலியபுரம் போலீஸாா் இளைஞரின் சடலத்தை மீட்டு துறையூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப் பதிந்து சுமை வாகன ஓட்டுநா் தொட்டியம் நாகராஜை (30) கைது செய்து விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments