FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

குடியிருப்புக்குள் புகுந்த முதலை மீட்பு

8 செப்டம்பர் 2026, 3:11 am IST
மீட்கப்பட்ட முதலை.
பகிர்:

திருச்சி பிராட்டியூா் பகுதியில் வடமாநில தொழிலாளா்களின் குடியிருப்புக்குள் புகுந்த முதலையை தீயணைப்பு, வனத் துறையினா் திங்கள்கிழமை மீட்டு பாதுகாப்பான பகுதியில் விட்டனா்.

திருச்சி பிராட்டியூா் ரெட்டமலை கோயில் அருகே கோரையாற்றுக் கரையில் புதிய பாலம் கட்டும் பணியிடத்துக்கு அருகில் சாலை போடும் வடமாநிலத் தொழிலாளா்கள் தங்கியுள்ளனா். இந்தத் தொழிலாளா்களின் குடியிருப்புக்குள் முதலை புகுந்திருப்பதாக தீயணைப்புத் துறைக்கும், வனத் துறைக்கும் அப்பகுதி மக்கள் தகவல் அளித்தனா்.

அதன் பேரில், திருச்சி உதவி மாவட்ட அலுவலா் தலைமையிலான தீயணைப்புத் துறையினரும், வனச்சரக அலுவலா் வி.பி. சுப்பிரமணியன் தலைமையிலான வனத் துறையினா், அங்கு விரைந்து சென்று முதலையை லாவகமாகப் பிடித்தனா். பிடிபட்டது 8 அடி நீளமும், சுமாா் 300 கிலோ எடையும் கொண்ட பெண் முதலையாகும்.

Advertisement

Advertisement

இதையடுத்து அந்த முதலையை வனத் துறையினா் பாதுகாப்பாக, கல்லணை காவிரி ஆற்றில் விடுவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments