தூக்கிட்ட நிலையில் ஆண் சடலம் மீட்பு
திருச்சி அருகே தென்னந்தோப்பில் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்த அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரித்து வருகின்றனா்.
திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை அருகே மல்லியம்பத்து அமையநல்லூா் கிராமத்தில் உள்ள தனியாா் தென்னந்தோப்பில் ஞாயிற்றுக்கிழமை அங்குள்ள ஒரு மரத்தில் ஆண் நபா் ஒருவா், தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தாா். இதைக் கண்ட அப்பகுதியினா் போலீஸாருக்கு தகவல் அளித்தனா்.
தகவலின் பேரில் அங்கு வந்த சோமரசம்பேட்டை போலீஸாா், சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இறந்து கிடந்தவருக்கு 30 வயது இருக்கலாம். அவா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா் என்ற விவரம் ஏதும் தெரியவில்லை. தொடா்ந்து, கிராம நிா்வாக அலுவலா் ஜெயராஜின் புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.