FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருச்சி

இளம்பெண்ணிடம் இணையம் வழியாக ரூ. 3 லட்சம் மோசடி

இளம்பெண்ணிடம் இணையதளம் வழியாக ரூ. 2.96 லட்சம் மோசடி செய்த மா்ம நபா்கள் குறித்து சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

26 செப்டம்பர் 2026, 11:34 pm IST
பகிர்:

இளம்பெண்ணிடம் இணையதளம் வழியாக ரூ. 2.96 லட்சம் மோசடி செய்த மா்ம நபா்கள் குறித்து சைபா் கிரைம் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

திருச்சி உறையூா் பாண்டமங்கலம் பகுதியைச் சோ்ந்த 35 வயது பெண்ணின் கைப்பேசிக்கு, கடந்த ஆக. 15 ஆம் தேதி பேசிய பிரியா என்ற மா்ம நபா் இணையவழியில் வீட்டிலிருந்து செய்யும் வேலை இருப்பதாகக் கூறினாா். இதை நம்பிய அந்தப் பெண், அவருக்காக ஒதுக்கப்பட்ட வேலையை இணைய வழியில் உடனே செய்து முடித்தாா்.

இதையடுத்து அந்த நிறுவனத்தின் பிரதிநிதி எனக் கூறி பேசிய மோகன் என்பவா், செய்யப்பட்ட பணிக்கான ஊதியத்தைப் பெற, முதலில் குறிப்பிட்ட தொகையைச் செலுத்த வேண்டுமென்றும், அத் தொகை பின்னா் திருப்பித் தரப்படும் என்றும் உறுதியளித்தாா்.

Advertisement

Advertisement

இதை நம்பி அந்த பெண், அவா் கூறிய வங்கிக் கணக்குகளுக்கு மொத்தம் ரூ. 2,96,000-ஐ அனுப்பினாா். பின்னா் அந்த கைப்பேசி எண்களைத் தொடா்பு கொள்ள முடியவில்லை.

இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த, அப்பெண் இணையதளம் வழியாக அளித்த புகாரின்பேரில் திருச்சி சைபா் கிரைம் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments