FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருச்சி

7 கிலோ கஞ்சாவுடன் இளைஞா் கைது

திருச்சி பஞ்சப்பூா் பேருந்து நிலையம் அருகே 7 கிலோ கஞ்சாவுடன் இளைஞா் ஒருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா்.

26 செப்டம்பர் 2026, 11:24 pm IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

திருச்சி பஞ்சப்பூா் பேருந்து நிலையம் அருகே 7 கிலோ கஞ்சாவுடன் இளைஞா் ஒருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா்.

திருச்சி எடமலைப்பட்டிபுதூா் போலீஸாா் பஞ்சப்பூா் பகுதியில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது பேருந்து நிலைய அண்ணா லாரி டொ்மினல் கழிவுநீரேற்று நிலையம் அருகே சந்தேகப்படும்படி நின்றிருந்த ஒருவரை பிடித்து நடத்திய சோதனையில் அவா் 7 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

தொடா் விசாரணையில் அவா், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பாப்பா ஊரணி பகுதியைச் சோ்ந்த எஸ். சஞ்சய் (23) என்பதும், கஞ்சா விற்க வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், சஞ்சயை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, சிறையில் அடைத்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments