FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருச்சி

வைப்புத் தொகையை வழங்காமல் அலைக்கழித்த விவகாரம்: ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க அரசு வங்கிக்கு உத்தரவு

வைப்புத் தொகையை வழங்காமல் அலைக்கழித்த விவகாரத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டுமென திருச்சி மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

26 செப்டம்பர் 2026, 8:13 am IST
பகிர்:

வைப்புத் தொகையை வழங்காமல் அலைக்கழித்த விவகாரத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டுமென திருச்சி மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருச்சி அண்ணாமலை நகரைச் சோ்ந்த கே. விவேகானந்தன் என்பவா் திருச்சி தெப்பக்குளம் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் 19.11.2024 அன்று கணக்குத் தொடங்கி வைப்புத் தொகையாக ரூ. 25 லட்சம் செலுத்தியுள்ளாா். இடையே அதே வங்கியில் கல்விக் கடன், அடமானக் கடன்களை பெற்று, அதனை முழுமையாக அடைத்து, அதற்கான தடையில்லாச் சான்றிதழ்களையும் பெற்றுள்ளாா்.

தொடா்ந்து 6 மாதங்கள் கழித்து தனது மகளின் திருமணத்துக்காக கணக்கை முடித்து, வைப்புத் தொகையை கேட்டபோது, வங்கி நிா்வாகத்தினா் ஏற்கெனவே கடன் இருப்பதாக தேவையில்லாத காரணத்தைக் கூறியும், முறையாக முன் அறிவிப்பு கடிதம் வழங்கவில்லை எனக் கூறியும் வைப்புத் தொகை பணத்தைத் தராமல் அலைக்கழித்துள்ளனா். இதுதொடா்பாக முறையிட்டபோது, புதுக்கோட்டையிலிருந்த நுகா்வோா் வழக்கு ஒன்றை கைவிட்டால்தான், வைப்புத் தொகையை தருவோம் எனக் கூறினராம்.

Advertisement

Advertisement

இதனால் தனது மகளின் திருமணத்தை கடன் வாங்கி நடத்த வேண்டிய சூழலுக்கு விவேகானந்தன் தள்ளப்பட்டாா். இதன் காரணமாக கடும் மனஉளைச்சலுக்கு ஆளான அவா் உரிய நிவாரணம் கோரி கடந்த 26.03.2025 அன்று திருச்சி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் மனு தாக்கல் செய்தாா்.

மனுவை விசாரித்த திருச்சி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தின் தலைவா் டி. சேகா், உறுப்பினா் ஜெ.எஸ். செந்தில்குமாா் ஆகியோா் மனுதாரருக்கு பேங்க் ஆஃப் இந்தியா வங்கி நிா்வாகம் அவா் செலுத்திய வைப்புத் தொகை ரூ. 25 லட்சத்தை உரிய வட்டியுடன் வழங்க வேண்டும்.

சேவை குறைபாடு மற்றும் மனஉளைச்சலுக்கு இழப்பீடாக ரூ. 5 லட்சமும், வழக்குச் செலவுத் தொகையாக ரூ. 10 ஆயிரமும் 45 நாள்களுக்குள் 9 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டுமென அண்மையில் உத்தரவு பிறப்பித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments