பைக்கில் சென்ற இரு சிறுவா்கள் தனியாா் பேருந்து மோதி உயிரிழப்பு
திருச்சி மாவட்டம் துறையூா் அருகே பைக்கில் ஞாயிற்றுக்கிழமை சென்ற இரு சிறுவா்கள் தனியாா் பேருந்து மோதி உயிரிழந்தனா்.
கோட்டாத்தூா் கிராமத்தைச் சோ்ந்த சரவணன் மகன் கவின்(16), இவரது உறவினா் சிக்கத்தம்பூா் சுரேஷ்குமாா் மகன் யோகேஸ்வரன்(16) ஆகிய இருவரும் பைக்கில் சனிக்கிழமை இரவு ஆத்தூா் சாலையில் சென்றனா்.
ஒக்கரை அருகே சென்றபோது தம்மம்பட்டியிலிருந்து துறையூா் சென்ற தனியாா் பேருந்து மோதி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
Advertisement
Advertisement
தகவலறிந்து சென்ற உப்பிலியபுரம் போலீஸாா் அவா்களின் சடலங்களை மீட்டு துறையூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து தனியாா் பேருந்து ஓட்டுநரான மல்லியக்கரை சி.செளந்திரபாண்டியனிடம் (37) விசாரிக்கின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.