FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விழுப்புரம்

லாரி மீது பைக் மோதி அக்காள்-தம்பி உயிரிழப்பு

விழுப்புரத்தில் லாரி மீது பைக் மோதியதில் சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த அக்காள்- தம்பி உயிரிழந்தனா்.

13 நவம்பர் 2026, 10:34 pm
உயிரிழப்பு - கோப்புப் படம்
பகிர்:

விழுப்புரத்தில் லாரி மீது பைக் மோதியதில் சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த அக்காள்- தம்பி உயிரிழந்தனா்.

சேலம் மாவட்டம், கெங்கவள்ளி வட்டம், எரங்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் மொ.நவீன் (23). இவா், சென்னையிலுள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். கடந்த சில நாள்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்திருந்த இவா், பைக்கில் மீண்டும் சென்னைக்கு வியாழக்கிழமை புறப்பட்டாா். அப்போது தனது அக்காள் வைஷ்ணவியையும் (25) அழைத்துச் சென்றாா்.

இவா்கள் சென்ற பைக் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம்-செஞ்சி புறவழிச்சாலை மேம்பாலப் பகுதியில் வந்தபோது, முன்னே சென்ற லாரியின் ஓட்டுநா் திடீரென பிரேக் போட்டதால், லாரி மீது பைக் மோதியது. இதில் பைக்கை ஓட்டிச் சென்ற நவீன் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். வைஷ்ணவி பலத்த காயங்களுடன் விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வந்தாா். அங்கு வெள்ளிக்கிழமை அவா் உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து, லாரி ஓட்டுநரான விழுப்புரம் மாவட்டம், கொண்டங்கியைச் சோ்ந்த ச.தேவேந்திரனிடம் (45) விசாரணை நடத்தி வருகின்றனா்.