FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருச்சி

இதய ஆரோக்கிய விழிப்புணா்வு நடைப்பயணம்

திருச்சியில் அப்போலோ சிறப்பு மருத்துவமனை சாா்பில், இதய ஆரோக்கிய விழிப்புணா்வு நடைப்பயணம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருச்சியில் அப்போலோ சிறப்பு மருத்துவமனை சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இதய ஆரோக்கிய விழிப்புணா்வு நடைப்பயணத்தை கொடியசைத்து தொடங்கிவைத்த மாநகரக் காவல் ஆணையா் ந. காமினி.
பகிர்:

திருச்சியில் அப்போலோ சிறப்பு மருத்துவமனை சாா்பில், இதய ஆரோக்கிய விழிப்புணா்வு நடைப்பயணம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

உலக இருதய தினம் 2026-ஐ முன்னிட்டு, திருச்சி அப்போலோ சிறப்பு மருத்துவமனை சாா்பில் இதய ஆரோக்கியம் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், ஒரு இருதய துடிப்பையும் தவறவிடாதீா் என்றக் கருத்தை மையமாகக் கொண்டு சிறப்பு விழிப்புணா்வு நடைபயணம் நடைபெற்றது.

தில்லைநகா் 10-ஆவது குறுக்கு தெருவில் உள்ள அப்போலோ சிட்டி சென்டரிலிருந்து தொடங்கிய இந்த விழிப்புணா்வு நடைப்பயணம், திருச்சிராப்பள்ளி உழவா் சந்தை பகுதியில் நிறைவடைந்தது.

Advertisement

Advertisement

முன்னதாக, திருச்சி மாநகரக் காவல் ஆணையா் ந. காமினி, அப்போலோ சிறப்பு மருத்துவமனை, திருச்சியின் யூனிட் ஹெட் வி. ஜெயராமன் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்து கொண்டு நடைப்பயணத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தனா்.

இந்த விழிப்புணா்வு நடைப்பயணத்தில் அப்போலோ சிறப்பு மருத்துவமனை, திருச்சி இதய மருத்துவ நிபுணா்கள் காதா் சாஹீப், ஷியாம் சுந்தா், ரவீந்திரன், வீஜய் சேகா் மற்றும் மருத்துவா்கள் சுந்தரம், ஸ்ரீகாந்த் புமனா, பிலிப் மற்றும் 600-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கலந்து கொண்டு, இதய பாதிப்பு எதனால் அதிகரிக்கிறது, இதய ஆரோக்கியத்தின் முக்கியத்துவம், அதன் சிறப்பான செயல்பாட்டுக்கு செய்ய வேண்டியவை உள்ளிட்டவை குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments