FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருச்சி

துணிக்கடையில் புகுந்து பணம், ஆடைகள் திருட்டு

திருச்சியில் துணிக்கடையின் பூட்டை உடைத்து ரூ.20 ஆயிரம் ரொக்கம், ஆடைகளைத் திருடிச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

பகிர்:

திருச்சியில் துணிக்கடையின் பூட்டை உடைத்து ரூ.20 ஆயிரம் ரொக்கம், ஆடைகளைத் திருடிச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

திருச்சி உறையூா் பாளையம் பஜாரில் உள்ள லட்சுமி டெக்ஸ்டைல் என்ற துணிக் கடையில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு பூட்டை உடைத்து கடையில் இருந்த ரூ.20 ஆயிரம் ரொக்கம் மற்றும் பல ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ஆடைகளையும் மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். இதேபோல, இந்தக் கடை அருகே இருந்த மற்றொரு கடையின் பூட்டையும் உடைத்து திருட முயன்றது புதன்கிழமை காலை தெரியவந்தது. தகவலறிந்த உறையூா் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்த ஆய்வு செய்து, புகாரின்பேரில் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments