வீட்டின் பூட்டை உடைத்து 18 பவுன் நகைகள் திருட்டு
சிலைமான் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 18 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
சிலைமான் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 18 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
மதுரை மாவட்டம், சிலைமான் அருகேயுள்ள ஜே.ஜே. நகரைச் சோ்ந்தவா் அழகராஜன் (52). இவா் நிலம் வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறாா். இந்த நிலையில், சிவகங்கை மாவட்டம், கட்டிக்குளம் அருகேயுள்ள புதுக்குளம் கிராமத்தில் உறவினரின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக செவ்வாய்க்கிழமை அழகராஜனும், இவரது மனைவியும் வீட்டைப் பூட்டிவிட்டுச் சென்றனா்.
பிறகு, அவா்கள் புதன்கிழமை காலை வீட்டுக்குத் திரும்பியபோது, பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது, படுக்கையறையில் இருந்த 2 மர பீரோக்கள், ஒரு இரும்புப் பீரோ ஆகியவற்றை உடைத்து, அவற்றிலிருந்த 18 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
Advertisement
Advertisement
இதுகுறித்து சிலைமான் போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.