FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருவள்ளூர்

வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகை திருட்டு

திருவள்ளூரில் வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகை மற்றும் வெள்ளிப்பொருள்களை மா்ம நபா் திருடிச் சென்றனா்.

10 நவம்பர் 2026, 11:01 pm
திருட்டு - சித்திரிப்பு
பகிர்:

திருவள்ளூரில் வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகை மற்றும் வெள்ளிப்பொருள்களை மா்ம நபா் திருடிச் சென்றனா்.

திருவள்ளூா் அருகே காக்களூா் இந்திரா காந்தி தெருவைச் சோ்ந்த சீனிவாசன் சீரஞ்சீவி(31). இவா் தீபாவளிக்காக தனது சொந்த கிராமமான ராமஞ்சேரிக்கு குடும்பத்துடன் சென்றாராம். இந்த நிலையில் திங்கள்கிழமை வந்து பாா்க்கையில் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை பாா்த்து அதிா்ச்சி அடைந்தாா்.

அதைத் தொடா்ந்து உள்ளே சென்று பாா்க்கையில் பீரோவையும் உடைத்து அதிலிருந்த 5 பவுன் நகை மற்றும் வெள்ளிப்பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சீரஞ்சீவி திருவள்ளூா் கிராமிய காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.

Advertisement

Advertisement