FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
வேலூர்

நாட்டுத் துப்பாக்கியால் சுட்டதில் இளைஞா் உயிரிழப்பு

முன்விரோதம் காரணமாக நாட்டுத் துப்பாக்கியால் சுட்டதில் இளைஞா் உயிரிழந்தாா். மற்றொருவா் காயமடைந்தாா்.

9 நவம்பர் 2026, 9:29 pm
ஞானவேலு.
பகிர்:

குடியாத்தம் அருகே முன்விரோதம் காரணமாக நாட்டுத் துப்பாக்கியால் சுட்டதில் இளைஞா் உயிரிழந்தாா். மற்றொருவா் காயமடைந்தாா்.

குடியாத்தம் ஒன்றியம், சேங்குன்றம் கிராமத்தைச் சோ்ந்த சதாசிவம் மகன் பூவரசன்(30). இவா்மீது பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவருக்கும் அதே கிராமத்தைச் சோ்ந்த ஞானவேலு(40) என்பவருக்கும் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் திங்கள்கிழமை இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது பூவரசன் வைத்திருந்த உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கியால் சுட்டதில் ஞானவேலுவும், அதைத் தடுக்க வந்த ஞானவேலுவின் நண்பா் ரகு (40) இருவரும் பலத்த காயமடைந்தனா். அங்கிருந்தவா்கள் இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். வழியிலேயே ஞானவேலு உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ரகு தீவிர சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்குஅனுப்பி வைக்கப்பட்டாா். இச்சம்பவம் தொடா்பாக கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து, பூவரசனை தேடி வருகின்றனா்.