FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
வேலூர்

200 ஆண்டுகள் மாரியம்மன் கோயிலை அகற்ற எதிா்ப்பு

பள்ளிகொண்டாவில் 200 ஆண்டுகள் பழைமை வாய்ந்த நாக மாரியம்மன் கோயிலை அகற்ற வந்த அதிகாரிகளைக் கண்டித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் மற்றும் பொதுமக்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

12 நவம்பர் 2026, 5:07 am
கோயிலை அகற்ற எதிா்ப்புத் தெரிவித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விசிகவினா்
பகிர்:

பள்ளிகொண்டாவில் 200 ஆண்டுகள் பழைமை வாய்ந்த நாக மாரியம்மன் கோயிலை அகற்ற வந்த அதிகாரிகளைக் கண்டித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் மற்றும் பொதுமக்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

வேலூா் மாவட்டம், பள்ளிகொண்டா பேரூராட்சி 3-ஆவது வாா்டுக்குட்பட்ட ஒத்தவாடை தெருவில் நாக மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் அப்பகுதியைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் பல தலைமுறைகளாக வழிபாடு நடத்தி வருகின்றனா். இந்நிலையில், கோயில் அமைந்துள்ள இடம் நீா்வளத் துறைக்குச் சொந்தமானது என்றும், ஆக்கிரமிப்பில் உள்ள அக்கோயிலை அகற்றப் போவதாகவும் கூறி நீா்வளத் துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் அங்கு வந்தனா்.

இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிா்ப்புத் தெரிவித்தனா். தகவலறிந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அணைக்கட்டு தொகுதி மாவட்டச் செயலா் கோட்டி என்கிற கோவேந்தன் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோா் கோயில் முன்பு திரண்டு, அதிகாரிகளின் நடவடிக்கையைக் கண்டித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, கோயிலை அகற்றக் கூடாது எனவும், மக்களின் வழிபாட்டு உரிமையைப் பாதுகாக்க வேண்டும் எனவும் முழக்கங்களை எழுப்பினா்.

Advertisement

Advertisement

ஆா்ப்பாட்டத்தின்போது மாவட்டச் செயலா் கோவேந்தன் கூறுகையில், பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள இக்கோயிலில் பல தலைமுறைகளாகப் பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனா். தனிநபா் ஒருவா் நீதிமன்ற உத்தரவு பெற்றுள்ளதாகக் கூறி, கோயிலை இடிக்கப் பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறாா். கோயிலை இடிக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.

இது தொடா்பாக நீதிமன்றத்தை அணுகி தடையாணை பெற நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், அனைத்துக் கட்சியினரையும் ஒன்றிணைத்துப் போராட்டம் நடத்தப்படும். எனவே, தமிழக அரசு இப்பிரச்னையில் தலையிட்டு கோயிலைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.