வேலூா் மாவட்டத்தில் 1.36 லட்சம் மாணவா்களுக்கு கேக், வாழ்த்து அட்டை
பள்ளிக் குழந்தைகளுக்கு கேக், வாழ்த்து அட்டைகளை வழங்கிய வேலூா் மாவட்ட ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ். உடன், வேலூா் சட்டப்பேரவை உறுப்பினா் எம்.எம்.வினோத் கண்ணன், மாநகராட்சி ஆணையா் கேத்திரின் சரண்யா உள்ளிட்டோா்.
குழந்தைகள் தினத்தையொட்டி, வேலூா் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சோ்ந்த 1.36 லட்சம் மாணவா்களுக்கு கேக் மற்றும் வாழ்த்து அட்டைகள் வழங்கப்பட்டன.
முதல்வா் ச.ஜோசப் விஜய், குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கேக் மற்றும் வாழ்த்து அட்டைகள் வழங்கும் திட்டத்தை சென்னையில் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
இதைத் தொடா்ந்து, வேலூா் மாநகராட்சிக்குள்பட்ட கொணவட்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ் பங்கேற்று, அப்பள்ளியைச் சோ்ந்த 1,071 மாணவ, மாணவிகளுக்கு கேக் மற்றும் வாழ்த்து அட்டைகளை வழங்கினாா்.
Advertisement
Advertisement
இதேபோல, மாவட்டம் முழுவதும் உள்ள 926 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவா்கள், ஆசிரியா்கள் மற்றும் பணியாளா்கள் என மொத்தம் 1,36,683 பேருக்கு கேக்குகளும், 1,30,593 மாணவா்களுக்கு வாழ்த்து அட்டைகளும் வழங்கப்பட்டன.
தொடா்ந்து, வேலூா் மாநகராட்சி, சேண்பாக்கம் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு சா்க்கரைப் பொங்கலையும், சத்துவாச்சாரியில் உள்ள புனித சிலுவை (ஹோலிகிராஸ்) செவித்திறன் குறையுடையோா் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கேக் மற்றும் வாழ்த்து அட்டைகளையும் ஆட்சியா் வழங்கினாா்.
இந்த நிகழ்ச்சிகளில், வேலூா் சட்டப்பேரவை உறுப்பினா் எம்.எம்.வினோத் கண்ணன், மாநகராட்சி ஆணையா் கேத்திரின் சரண்யா, மாவட்ட வருவாய் அலுவலா் து.சுரேஷ், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பிரேமலதா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலா் பாபு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.