ஆற்று மணல் கடத்திய லாரி பறிமுதல்
ஆந்திர மாநிலத்திலிருந்து உரிய அனுமதியின்றி ஆற்று மணல் கடத்தி வந்த லாரியைப் பறிமுதல் செய்து ஓட்டுநரையும் கைது செய்தனா்.
ஆந்திர மாநிலத்திலிருந்து உரிய அனுமதியின்றி ஆற்று மணல் கடத்தி வந்த லாரியைப் பறிமுதல் செய்து ஓட்டுநரையும் கைது செய்தனா்.
வேலூா் மாவட்டம், காட்பாடி அடுத்த கிறிஸ்டியான்பேட்டை சோதனைச் சாவடியில் வியாழக்கிழமை போலீஸாா் வழக்கமான வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது ஆந்திர மாநிலத்திலிருந்து அவ்வழியாக வந்த லாரியை மறித்து சோதனையிட்டனா். இதில், உரிய அனுமதி மற்றும் ஆவணங்கள் இன்றி சுமாா் 2 யூனிட் ஆற்று மணல் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, மணல் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட லாரியைப் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
மேலும், இதுதொடா்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸாா், லாரியை ஓட்டி வந்த காட்பாடி மதி நகரைச் சோ்ந்த விக்னேஷ் (25) என்பவரைக் கைது செய்தனா்.
Advertisement
Advertisement